5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மாநிலங்களில் பா.ஜ.க அரசு மக்கள் நலனுக்காக அயராது உழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். […]