Farmers protest : மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த 13ம் தேதி டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை தொடங்கினர். Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் […]
கானௌரி எல்லையில் காயமடைந்த விவசாயிக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஹரியானா காவல்துறைக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளும், மத்திய அரசுக்கும் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முடியாதபடி […]
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 13-ம் தேதி முதல் தங்கள் டிராக்டர் மூலம் கானௌரி மற்றும் ஷம்புவில் முகாமிட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து பஞ்சாப்- ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த விவசாய […]
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம், பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் கடனை தள்ளுபடி என 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பேரணி போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாய அமைப்பினர் மற்றும் […]
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் பயிர்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ‘டெல்லி சலோ’ என்று தலைநகரை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க டிராக்டர் மூலம் பேரணியாக டெல்லியை நோக்கி படையெடுத்து வரும் விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானாவின் ஷம்பு எல்லையில் குவிந்து வருகின்றனர். இதனால் […]
விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டெல்லி எல்லைப் பகுதியில் போலீசார், துணை இராணுவப்படை குவிக்கப்பட்டு டெல்லி நுழையாமல் தடுத்து வருகிறார்கள். இதை மீறி நுழைய முயலும் விவசாயிகள் மீது கண்ணீர் […]
அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய சட்டம் இயன்ற வேண்டும், மின்சார திருத்த மசோதா 2020 ரத்து செய்யவேண்டும், கடந்த முறை நடைபெற்ற விவசாய போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி போரணியாக செல்கின்றனர். விவசாயிகள் டெல்லியில் நுழையாமல் இருக்க பஞ்சாப் ஹரியானா மற்றும் உத்திரபிரதேச எல்லையில் போலீசாரும், துணை பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி […]
கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி தற்போது வரை பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் […]