தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் டெல்லி மாநில அரசு செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அதற்கிடையில் டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் சற்று உயர்ந்து காற்றின் தரம் மிக மோசமான நிலை என்றதில் இருந்து மோசமான நிலை என்றானது. இப்படி ஏற்ற இறக்கங்களாய் சந்தித்த டெல்லி காற்றின் தரத்தை கடந்த ஒரு மாத கால சராசரியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த […]
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் […]
டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதுவும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காற்றின் தரக்குறியீட்டு எண் 472ஆக பதிவாகி இருந்தது. அது மிகவு மோசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. காற்றில் நச்சு விளைவிக்கும் மாசு இருப்பதாக ஆய்வில் […]
டெல்லியில் காற்று மாசு தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள காற்று மாசை தடுக்க முழு […]
காற்று மாசை தடுக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி : சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். […]