டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று 47வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 17.8 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சைக்கு மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறிந்து அகற்றப்பட்டது.
1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார். இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை இன்று […]