தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கி, பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் நீண்டது. அதன் பிறகு தற்போது உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மழை நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு வானிலை தகவல்களை தெரிவித்தார். ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.! […]
அடுத்த ஓரிரு மணிநேரங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இனி வரும் மழையையும் எதிர்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும் , தென் தமிழக மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது கனமழை, மிதமான மழை என பருவமலைக்கு முன்பே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது . அதன்படி, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் இன்று கனமழை […]
தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,இன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான […]
சென்னை:தமிழகத்தில் நாளை தஞ்சை,திருவாரூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் தஞ்சை,திருவாரூர், நாகை,மயிலாடுதுறை,கடலூர், ராமநாதபுரம்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,நாளை காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள […]
அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், பயிர்ப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர்கள் குழு. சென்னை : கடந்த 11-ஆம் தேதி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும். பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. […]
சென்னை:மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் தமிழகத்தில் இல்ல பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். அதே வேளையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். திருச்சி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக […]