கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் உடனடியாக விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதை தமது அமைச்சகம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் வரை உடனடித் தீர்வாக பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க […]