தமிழ்நாட்டின் டி.ஜி.பியாக பணியாற்றி வந்த டிகே ராஜேந்திரன் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். இந்நிலையில் டிகே ராஜேந்திரன் ஒய்வு பெறுவதால் தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. ஜே.ஜே.திரிபாதி பதவியேற்று கொண்டார். இந்நிலையில் டிகே ராஜேந்திரன் இது குறித்து பேசுகையில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழக காவல்துறை கடுமையான சோதனைகள், சவால்களை சந்தித்துள்ளது. சட்டப்படி செயல்பட்டேன், 33 ஆண்டுகால காவல்துறை பணியில் இருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன் என்று தெரிவித்தார்