கரூரில் 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , செப்டிக் டேங்க் உள்ளே இருக்கும் சவுக்கு காம்புகளை அவிழ்க முற்பட்ட உள்ளே இறங்கியபோது 4 தொழிலாளர்கள் விஷ வாயு […]
திருமாவளவன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் டிஜிபி-யை நேரில் சந்தித்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி மனு அளித்துள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக சார்பில் நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கும் […]
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கு பின் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்தளித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 12 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு […]
10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலு, இதுகுறித்து அவர் கூறுகையில், 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும், 12 மரணங்கள் மட்டும்தான் போலீசாரால் நிகழ்ந்துள்ளன. 2021 இல் நான்கு மரணங்கள், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே […]
தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன. கடந்த சில காலமாக கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலரும் அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இதனை தடுக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் ஒருவாரத்தில் 124 கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 89 புகார் மனுக்கள் மீது முதல் […]
தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைபர் குற்றப்பிரிவு தலைவரான அமரேஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எம்.ரவிக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு தலைவர் ஜெயந்த் முரளி டிஜிபியாக பதவி உயர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் உள்ள ஏ.டி.ஜி.பி கருணாசாகருக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு […]
தமிழகத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய,மாநில சின்னங்கள்,முத்திரைகள்,ஸ்டிக்கர்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை,ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு,அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துகின்றார்.எனவே,அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டோ என்பவர் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக,காவல்துறை […]
முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக அரசு ஏவல் துறையாக காவல்துறையை பயன்படுத்துவதாகவும், டிஜிபி-க்கு என்ன கண்ட்ரோல் இருக்கிறது. எதற்காக டிஜிபி என்ற ஒரு பதவி தமிழகத்தில் இருக்க வேண்டும், எனக்கென்னமோ சட்டம் நிலைநாட்டக் கூடிய அதிகாரிகள் அவர்களது கடமையை நேர்மையாக, நாணயமாக செய்வதாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்க்கு பதிலளிக்கும் […]
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று. சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் அவசரகால உதவி எண்களான 100, 112 மற்றும் 101 போன்ற அழைப்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத்தளத்தில் இதுவரை 1.12 கோடி அழைப்பு விவரங்களும், 14.5 லட்சம் காவலன் செயலி பயன்படுவோரின் தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட் இன்ஸ்டிடியூஷன் இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பிற்கு ISO […]
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானியக்கோரிக்கையின் போது காவல்துரைய்யின் மீதான அதிருப்தியை இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கன்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொதுமக்கள் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரச்னையை பெரிதாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாதி, மத ரீதியான […]