வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி பேருந்துகளில் தமிழக போக்குவரத்து டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கவனத்திற்கு தெரிவிப்பது யாதெனில், நமது கழகத்தின்மூலம் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளை, தமிழ்நாடு போக்குவரத்து கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆதலால், நமது பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய நிறுத்தினால், பேருந்துகளை நிறுத்தி பரிசோனைக்கு வேண்டிய […]