TASMAC : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வழக்கமாக தேர்தல் நடைபெறும் நாளன்று மதுபான கடைகள் மூடப்படும். அதே […]
தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. தமிழக அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி, டாஸ்மாக் மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் உள்ளிட்ட மதுவகைகளின் விலை விரைவில் உயர உள்ளதாக கூறப்பட்டது. இதற்கேற்ப ஆப் பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்வதாக தகவல் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..! மேலும், இந்த 4 மாவட்டங்களிலும், கல்வி நிறுவனங்கள், […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! கனமழை […]
சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரதசகக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் ஆஜராகி விளக்கமளித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி […]
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை […]
டாஸ்மாக் மூடிய பிறகு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. டாஸ்மாக் மதுபான கடை மூடிய பிறகும் பலர் பொது இடங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில்,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் பொதுவெளியில் மது அருந்துவோரை […]
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன. தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் விடுமுறை. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, […]
டாஸ்மார்க் பணியாளர்கள் டாஸ்மார்க் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக அறிக்கை. பெரும்பாலான கடைகளில் ஊழியர்கள் பணியில் இல்லாமல் வெளி நபர்களை பணியில் அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் பணியாளர்கள் டாஸ்மார்க் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரியும் பொழுது சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளரின் அனுமதி பெற்று […]
மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டமில்லை – உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திட்டவட்டம். மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்குக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் உறுதியளித்தது. இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உததரவு. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தடையை மீறி மதுபான விற்பனை, மதுபான […]
பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? என அண்ணாமலை கேள்வி. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு […]
ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தல். ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள […]
சேலம் மாவட்டம் , சென்னிமலையில் அரசு கல்லூரிக்கு அருகே உள்ளே மதுபான கடையினை அகற்ற கோரி, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் . சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சென்னிமலை எனும் இடத்தில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு அருகே செல்லும் வழியில் அரசு மதுபான கடை உள்ளது. கல்லூரி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதால் அந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பாமகவினர் […]
திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி முத்துப்பேட்டை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப கொடுத்து விட்டு,பாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கொடைக்கானலில் உள்ள 10 […]
தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும்,சென்னையில் ரூ.52.28 கோடிக்கும்,திருச்சியில் ரூ.49.78 கோடிக்கும் மதுப் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.மேலும்,சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடி,கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில்,சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்,குறிப்பாக வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாவும் புகார் எழுந்த நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள்,கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.மீறினால்,மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில்,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் […]
இயேசு பிரான் உயிர் தியாகம் செய்த புனித வெள்ளிக்கிழமை அன்று டாஸ்மாக் கடைகளையும்,மதுக்கூடங்களையும் மூடிட ஆணை பிறப்பிக்கவேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக “புனித வெள்ளியாக” அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும், இரத்த தானம் செய்தும் அவருக்கு […]