இரண்டு நாட்களுக்கு முன்பு துபாயில் நடந்த ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 1.5 கோடிக்கு டாம் கரணை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் லீக் தொடரான பிக்பாஷ் லீக்கில் விளையாடி வரும் டாம் கரன் ஆடுகளத்தில் ஓடி வார்ம் அப் செய்ததற்காக நடுவருடன் சண்டை போட்டதால் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கரன் தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். […]