பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசு அதன் இயல்பைக் காட்டிவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்வரை காத்திருக்க முடியாது என்றும், கர்நாடக விவசாயிகளின் தேவைகளுக்காக கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி அறிவித்திருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாததால் கர்நாடகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் போலவும், ஆணையம் அமைக்கப்படாததற்கு தமிழ்நாடு […]