ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர்வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர […]
ராஜஸ்தானில் வயதான தந்தையிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒருவர் வயதான தந்தை தெருவில் வைத்து அடித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தனது தந்தையுடன் வீட்டு விஷயங்களில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த வீடியோவில்,வயதான ஒரு நபரை ஒரு இளைஞர் தெருக்களில் வைத்து தாக்குவது […]
ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் […]