Election2024 : கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோதிமணி பிரச்சாரம் செய்கையில் தனது அம்மாவை நினைத்து அழுதுவிட்டார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று தனது சொந்த ஊரான அறவன்குறிச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் . அப்போது பேசுகையில் மறைந்த தனது தாய் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழுதார் . அவர் பேசுகையில் , சிலிண்டர் விலை 300 இருந்தது 1000 ரூபாய் ஆகிவிட்டது […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் […]
காங், தலைவர் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே தலைவராக […]
மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள் என ஜோதிமணி எம்.பி ட்வீட். திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சையான நிலையில், ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை […]
நரேந்திர மோடியை காப்பாற்ற வேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை விமர்சித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ 50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இது வேடிக்கையாக இல்லையா? காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே, இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என […]
விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என ஜோதிமணி எம்.பி ட்வீட். இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். 3வது நாளான இன்று நடைபயணத்தை இன்று காலை 7 மணிக்கு தொடங்கினார். சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் […]
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள் என ஜோதிமணி எம்.பி ட்வீட். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் அவர்கள் வருகை புரிந்தார். அப்போது அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின் பாஜகவினர் […]
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் இருந்து மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே மக்களவை மற்றும் மாநிலநக்கலவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று அதே சூழல் தான் மக்களவை கூடிய போது ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் […]
கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுக்கிற மரியாதையை உலகறியும் என ஜோதிமணி எம்.பி ட்வீட். ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் MP ஜோதிமணி அவர்கள் திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் MP திரு சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த திமுக அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் […]
பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா? என ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சி.டி.ரவி ஆகியோர் உடனிருந்தனர். இந்த […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஜோதிமணி ட்வீட். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘எமது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் பணியாற்றியுள்ள, 15 வருட கால காலத்தில் தனது விழுமியங்கள், கொள்கை மற்றும் நேர்மையில் […]
எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால்,உள்ளத்தால் தமிழர் எனவும்,எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது நேற்று பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும்,கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.மேலும்,உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது […]
அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே! ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் கடந்த 2 தினங்களுக்கு முன்பதாக தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் […]
விவசாய விரோத மோடி அரசை இந்திய மக்களின் துணையோடு காங்கிரஸ் கட்சி துடைத்தெறியும். உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், […]
மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிடியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இதனையடுத்து,பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஏ.கே.ராஜன் குழு,நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் […]
சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிராக பாலியல் தொடர்பான வீடியோசமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இந்த விவகாரம் சமூக குப்பை என்றும் யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். […]