ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு […]
ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மார்க் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் […]
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு உள்ளது.இதில், தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் பதிவு […]