லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த 6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் […]