தமிழகம்:வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக ஜெய்பீம் படக்குழுவினரிடம் ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பாமக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிடியில் வெளியானது.இப்படம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றாலும்,படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி […]
வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]
பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ‘ஜெய்பீம்’ படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள் என்றும் நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மனம் திறந்துள்ளார். பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு,பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்றையதினம் […]