Maldives : இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை குறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி லட்சதீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்திய தீவான லட்சத்தீவுக்கு வாருங்கள் என பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு மாலத்தீவு அமைச்சர்கள், இந்தியா எவ்வளவு முயற்சி செய்தாலும் மாலத்தீவு அளவுக்கு சுற்றுலா தரத்தை அளிக்க முடியாது என பதிவிடும் வகையில் கருத்து கூறியிருந்தனர். இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் […]
Jaishankar : உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால் அது என் வீடாக மாறிவிடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் இணைத்து பெயர் வெளியிடுவது, அங்கிருந்து வருபவர்களுக்கு இந்திய விசா என குறிப்பிடாமல் சீனாவின் குறிப்பிட்ட பெயரை வைத்து விசா பதிவிடுவது என பல்வேறு சர்ச்சை வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கனவே, கடந்த 2017, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சல பிரதேச சில […]
Kachchatheevu: கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தம் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 […]
தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம். தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி […]
12 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படங்களையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 15-6-2022 அன்று 61 நாட்கள் மீன்பிடி […]
கடலூர்:தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் தேமுதிக பிரமுகரும்,பிரபல தொழிலதிபருமான ஜெய்சங்கர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,விருத்தாச்சலத்தில் உள்ள பள்ளி,நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர் கடந்த தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
எவர் வேண்டும் என்றாலும் வரலாம் என வரவேற்கும் நாடு ஏதாவது இருக்கிறது என்றால் அதை காட்ட முடியுமா என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பேச்லட் தன்னையும் வாதியாகச் சேர்க்கக் கோரிமனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர் கேட்டதற்கு காஷ்மீர் விவகாரத்திலும் இதற்கு முன்னும் ஐ.நா. மனித […]