ஜார்கண்டில் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொன்ன கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி. ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள, ஜோர்பிதா கிராமத்தில், புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைப் பார்க்கச் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய பின், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே ஜீன்ஸ் அணிந்து சென்றது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண், கணவனை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து ,காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]