புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் புதுவை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் 2–வது மாடியில் மருத்துவ ஆவண பதிவேட்டு அறை உள்ளது. இங்கு நோயாளிகளின் பற்றிய பதிவேடுகள் சேகரித்து வைக்கப்படும். இதன் அருகில் உள்ள அறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஆவண பதிவேட்டு அறையில் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது. […]