கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள் என பழனிவேல் தியாகராஜன் பேட்டி. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள். ஆம் நான் கர்ப்பிணிகளின் உடல்நலனில் அக்கறை கொண்ட அமைச்சர்; இது போன்ற […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை […]
நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்தியா கூட்டாட்சி தத்துவ நாடு என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு எனவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது […]