தமிழகத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்று ஓய்வு பெற இருந்த ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் சில மாதங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு உறுதிப்படுத்தாத காரணங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சண்டிகர் மேயர் தேர்தல் […]
விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என மத்திய அரசு பதில். கதிரடிக்கும் இயந்திரங்கள், நடவு செய்யும் இயந்திரங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழங்களை சுத்தம் செய்தல், வரிசைப்படுத்தல், தரம் பிரித்து ஆகிய இயந்திரங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், புகையிலை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டில் ரூ.1,369 […]
இன்று நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார். 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர், மாநில நிதியமைச்சர்கள், மாநில முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். […]
கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத வரையிலான கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக ஒரு மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், […]
நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர் சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர் சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சமீப நாட்களில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இவருக்கு சொந்தமான உணவகங்களில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்மன் உணவகங்களுக்கு தலைமையிடமாக இருக்ககூடிய தெப்பக்குளம் […]
ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் […]
அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். மத்திய நிதி அமைச்சகம், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது அத்துடன் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘” எதற்கு கேட்கிறாய் வரி. யாரை கேட்கிறாய் […]
நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஹோட்டல் அறை, ரயில் டிக்கெட் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை முன்பதிவு செய்து, இப்போது அதை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளீர்களா? இதோ உங்களுக்காக ஒரு செய்தி. ரத்து செய்வது சேவைகளுடன் தொடர்புடையது என்பதால், ரத்து கட்டணம் இனி ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவு பல விதிகளை விளக்கும் 3 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒன்று ரத்து கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி […]
பன்னீர் பட்டர் மசாலாவின் ஜிஎஸ்டி வரி பற்றி வைரலாகும் டிவீட்டர் பதிவு. மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 18 முதல் ஒரு சில உணவு பொருட்களுக்கு கூடுதலான ஜிஎஸ்டி வரிவிதித்தது என்பதும் இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது என்பதையும் அறிவோம். அதில் பால், தயிர் மற்றும் பனீர் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் வெண்ணெய்க்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதையடுத்து சைவ உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவான பன்னீர் பட்டர் […]
உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை. விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி, ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது. மேலும் ரூ.1,000 மதிப்புள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதமும், சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு 5 […]
சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 47வது கூட்டத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம், மக்கானா, குறிப்பிட்ட மாவுகள் போன்ற குறிப்பிட்ட முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பொருட்கள், தளர்வாக விற்கப்படும் போது, […]
புதிய ஜி.எஸ்.டி வரி அமல்படுத்துதல் காரணமாக முக்க்கிய பொருட்களின் விலை இன்று முதல் ஏற்றம் கண்டுள்ளது. இன்று முதல் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருத்துவமனை அறைகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளன. கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில், ஏராளமான பொருட்கள் மற்றும் […]
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிப்பதாக, இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி […]
2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல். ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு நேற்று விடுத்திருந்தது. மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு […]
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. “மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் திட்டங்கள் குறிப்பாக மூலதனச் செலவுகள் நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மத்திய அரசு மே 31 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் சுமார் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், முழுத் தொகையையும் மத்திய அரசு […]
இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின் சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது. இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் […]
அன்றாட சாப்பிட தேவைப்படும் சமையல் பொருட்களான அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் சரக்கு & சேவை வரியை 18%-லிருந்து 28% ஆக உயர்த்துவதற்கான மாநிலங்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,143 பொருட்களில் அப்பளம்,வெல்லம்,பவர் பேங்க்கள், கைக்கடிகாரங்கள்,சூட்கேஸ்கள்,கைப்பைகள்,வாசனை திரவியங்கள்,கலர் டிவி செட்கள் (32 அங்குலத்திற்கு கீழே), சாக்லேட்டுகள்,சூயிங்கம்,வால்நட்,கஸ்டர்ட் பவுடர், மது அல்லாத பானங்கள்,பீங்கான் மூழ்கிகள்,பாத்திரம் கழுவும் தொட்டிகள், கண்ணாடிகள்,கண்ணாடிகளுக்கான பிரேம்கள் மற்றும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டு […]
பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்திலிருந்து 5.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 18% […]
இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக […]
தமிழகம்:நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத GST வரியினை முழுமையாக ரத்து செய்ய, GST குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்,விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது […]