தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தயாரிப்பாளர் மனுகுமரன், […]