சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் […]
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய கோரி மாணவியின் […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான மதன்: இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தருமபுரி அருகே பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். குண்டர் சட்டம் – சிறையில் அடைப்பு: […]
குஜராத் மாநிலத்தில் உள்ள தலித் சமுதாய மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருபவரும், எம் எல் ஏவுமாகிய ஜிக்னேஷ் மேவானி அவர்கள் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் இரு முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறி உள்ளார். கோட்சேவுடன் பிரதமரை ஒப்பிட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியேறிய அன்றைய தினமே, பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக […]
குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் தொடர்ந்து பிரதமர் மோடி குறித்தும், பாஜக […]
குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். இவர் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 […]
பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. குற்றவாளியின் மருத்துவ அறிக்கையை நீதிபதிகள் பார்த்துள்ளனர். அதில், அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அவரால் ஒருவரின் ஆதரவின்றி நடக்க முடியாது எனவும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மீண்டும், மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
அதிகமான குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என இந்துக்களிடம் ஜாமீனில் வெளியாகிய அர்ச்சகர் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார். ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் தான் தேவி கோயில் தலைமை அர்ச்சகர் யதி நரசிங்கானந்த். இவர் ஜமீனிலிருந்து வெளியாகிய இரு நாட்களிலேயே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பல சர்ச்சை பேச்சுக்களை பேசியிருந்தார். தற்போதும் இவர் வரும் 10 ஆண்டுகளில் இந்தியா இந்துக்கள் இல்லாத நாடாக மாறுவதை தடுக்க அதிக குழந்தைகளை உருவாக்க வேண்டும் […]
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து,தனக்கு இதய கோளாறு உள்ளிட்டவைகள் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவசங்கர் பாபாவிற்கு எதிராக எட்டு […]
விருதுநகர்:பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன். விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். அதன்பின்னர்,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன்,ஜூனைத், மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி […]
சென்னை அரும்பாக்கத்தில் முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்பையாவை காவல்துறை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை […]
கடந்த மாதம் 21-ம் தேதி திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், சாலை மறியல் , நில அபகரிப்பு உள்ளிட்ட மேலும் 2 வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக நபரை தாக்கிய வழக்கு, சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஜெயக்குமார் காவல் […]
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பேரறிவாளன் மனு மீதான காரசார வாதம் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறுகையில் பேரறிவாளன் விவகாரம் தங்கள் அதிகாரத்தின் கீழ் […]
‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன். திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் இருவரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கடந்த ஜூலை 25 ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பீர் பாட்டிலால் சுரேசை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது பொய்யாக பதிவு […]
ஐஐடி கவுகாத்தியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பிடெக் மாணவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. ஐஐடி கவுகாத்தியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐஐடி-கவுகாத்தியின் பிடெக் மாணவருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு, ஐஐடி கவுகாத்தியில் மாணவி ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்து அடுத்த நாள் மீட்கப்பட்டு அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]