தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடந்ததில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதி பாரதிதாசன் முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் சில இடங்களில் முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி, முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என […]
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். உறுதிமொழியேற்ற பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இதில் தமிழக அமைசர்கள், நாடாளுமன்ற […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன ஜல்லிக்கட்டுப் போட்டிகள். கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த இராச்சாண்டார் திருமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பாத்திரங்கள், சைக்கிள், தங்க காசு, பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த 2 வீரர்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையில் […]
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் நிலையில் உள்ளது மதுரை அலங்காநல்லூர். இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா வரும் 16ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன…