ஜம்மு காஷ்மீரில் திரிகூடமலையில் காட்டுத் தீ பற்றி எரிவதால் வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது இரண்டாம் நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் பாதையில் பற்றிய தீ இரு நாட்களாக எரிந்து வருகிறது. மலைப்பாதை வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை மலைப்பாதை வழியாக நடை பயணத்துக்கு அனுமதியில்லை என்பதால் 25ஆயிரம் பக்தர்கள் […]