54 வயதுடைய முன்னாள் டென்னிஸ் வீரரும், மூன்று முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமாகிய போரிஸ் பெக்கர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் சிறந்த டென்னிஸ் வீரராக இருந்து வந்த நிலையில், தனியார் வங்கி ஒன்றில் கோடிக்கணக்காக பணம் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாததால் தான் திவாலானவர் என பெக்கர் அறிவித்திருந்தார். ஆனால் போரிஸ் பெக்கர் பொய் சொல்லியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணங்கள் அனைத்தையும் தனது […]
இந்தியன் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சென்னையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா தங்கநகை மாளிகை கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய இரண்டு கட்டிடங்களுக்கான இடத்திற்காக இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கான நிலுவை தொகையை இந்தியன் வங்கிக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர். […]
பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வேதுறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள மேற்கண்ட இரு ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் […]