தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் […]