குஜராத்தை சேர்ந்த 24 வயது பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்த பெண் சாமா பிந்து. இவருக்கு வயது 24. இவர் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் அழைத்துள்ளார். […]