இந்திய கடற்படை 24 மணி நேரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்துள்ளது. சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. நேற்று ஈரானை சார்ந்த 17 பேர் ஏடன் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் […]
சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் […]
சோமாலியா தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 12 பேர் இறந்ததாகவும் ,20 பேர் காயமுற்றுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியாவின் தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு கார் குண்டுகள் வெடித்துள்ளது.இரண்டாவது குண்டுவெடிப்பு ஒரு பரபரப்பான உணவகத்தின் முன் நிகழ்ந்துள்ளது. ஆமின் ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குனர், பல காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை சேகரித்ததாக கூறினார். […]