தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. 2001 – 2006 ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 2017-ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. […]