குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டுக்கள். – டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்கள் சந்திப்பு. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தான் தற்போது வரையில் தமிழகத்தில் தலைப்பு செய்தி. இந்த சம்பவத்தில் ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். அவருடன் தொடர்புடைய 6 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இந்த வழக்கானது தமிழக காவல்துறையிடம் இருந்து முதல்வர் பரிந்துரையின் பேரில் என்ஐஏ அதிகாரிகளிடம் […]
தமிழக எல்லைகளில் சாலை மார்க்கமாக போதை பொருள் நடமாட்டம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், கடந்த 3 மாதத்தில் மட்டும் ரயில்வே போலிசாரால் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்தார். இன்று சென்னையில், ரயிலில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வின் போது டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து […]
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். […]
நடிகர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். ஆன்லைன் விளையாட்டு மோகம் தற்காலத்து இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் அதிகமாகவே பரவி வருகிறது. குறைவான முதலீடு அதிகளவு லாபம் என கண்ணை பறிக்கும் விளம்பரங்கள் படித்த இளைஞர்களையும் கவர்ந்து விடுகின்றன. அதனை நம்பி ஏமாந்து பலர் தங்கள் பெரும்பகுதி பணத்தை இழந்துள்ளனர். சிலர் இதனால் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரையும் மாய்ந்துள்ள சம்பவங்களையும் நாம் அவ்வப்போது செய்திகள் மூலம் […]
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை களைய முயன்ற காவலருக்கு, டிஜிபியை நேரில் பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்ததாகவும், தன்னுடைய குறைகளை கூற, டிஜிபி முகாம் அலுவலகத்திற்கு பலமுறை வந்ததாகவும், ஆனால்,அலுவலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க அனுமதிப்பதில்லை. எனவே, இந்த வீடியோவை […]
போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா , 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய கடிதத்தில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது. இதயத்தில் எந்தக்கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம். தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் […]
புதியதாக அமையும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இடம்பெறும் காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 104 காவல் நிலையங்கள் இடம்பெறும். புதியதாக அமையும் ஆவடிகாவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் இடம்பெறுகின்றன. தாம்பரம் ஆணையரகத்தின் கீழ் 20 காவல் நிலையங்கள் இடம்பெறும். 3 காவல் ஆணையரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களின் பட்டியலை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆவடி காவல் […]