தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் ஆகியோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே விற்கப்படும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு. இதுகுறித்து வெளியான அறிக்கையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க, இன்று (06:12.2021) முதல் 06.01.2022 வரை ஒருமாத காலம் “கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை ” நடத்த வேண்டும். இதில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். […]
போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது கை துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை […]
முதல்வர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற நபரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தின் முன் வந்த வெற்றிமாறன் என்ற நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை பாதியில் அனைத்த போலிசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், […]