சென்னையில் நடந்து வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 30 இந்திய செஸ் வீரர்கள் மட்டும் விளையாடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் இரண்டு வீரர்கள் ஹாங்காங் அணிக்காக விளையாடுகின்றனர். ஹாங்காங்கிற்கான ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண் கே.சிகப்பி மற்றும் அவரது மகன் கே.தண்ணீர்மலை விளையாடி வருகின்றனர். சிகப்பியின் கணவர் பி.ஆர்.கண்ணப்பன் ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார். மதுரையில் பிறந்த சிகப்பி, இளம் வயதிலேயே செஸ் கற்று, வயது பிரிவு போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் […]
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “செஸ் ஒலிம்பியாட்” போட்டியானது சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் மிக முக்கியமானதாக உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகள் ரத்து செய்து வரும் நிலையில்,ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த நடப்பு ஆண்டிற்கான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியகளும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து,செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இந்நிலையில்,44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறும் […]