அமெரிக்காவில் தனியார் மருத்துவமனை பிரசவ வார்டில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 14செவிலியர்கள் பிரசவ வார்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த 14 செவிலியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளனர். இந்த 14 பேரில் கெய்ட்லின் ஹால் என்ற பெண்ணிற்கு கடந்த 3-ஆம் தேதி குழந்தை பிறந்தது. […]
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை […]
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 […]
தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை தமிழக முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா முதல் அலை: “கொரோனா முதல் அலையின்போது தமிழகத்தில் சுமார் 3,000 செவிலியர்கள் மருத்துவத் தேர்வாணையத்தால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு […]