Election2024: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என்று செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விருதுகரில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காமல், சுயாட்சி வழங்க வேண்டும். குறிப்பாக நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலைகளில் பாஜக […]
Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா […]
Election2024 : இன்று மாலைக்குள் தமிழகக்தில் மீதம் உள்ள 2 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரமாக்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களை முதல்வர் அறிமுகப்படுத்தவுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதியும் , புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 10 […]
Congress : இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டியிருந்தது. இருப்பினும், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. […]
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்று கொண்டார். அவர் தலைமையில் காங்கிரஸ் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளது. அவர் தொடர்ந்து 5 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “இந்தியா கூட்டணியில் அங்கம் […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது.இதனிடையே,விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில்,போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சட்டபேரவையில் பேசுகையில்:”தமிழக […]
தாடி வைக்காத, தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை புகழ்ந்து கூறியுள்ளார். பெரியாரின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இனிமேல் பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சமூக நீதிப் பேரவைக்கு பெரியார் அளித்த அடித்தளமே காரணம் எனவும், பெரியார் யாரும் எழுத தயங்கியதை […]