திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நேசபிரபு என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு நேசபிரபுவை அடையாள தெரியாத மர்மநபர்கள் தாக்கியதில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 2 பேரை காவல்துறை கைது செய்தனர். அதன்படி, இந்த […]