இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். இதைக்கவனித்த இந்திய ராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். […]