சென்னை:ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் […]
ஜன.20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனில் தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் வகுப்புகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. சமீபத்தில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால், ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். […]
மதுரை:நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளதால் பரபரப்பு. கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,கொரோனா […]
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது […]