மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியினர் மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. சென்னை மத்திய பகுதிகளில் நிலைமை பெருமளவு சீரடைந்தாலும், சென்னை புறநகர் பகுதியில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. ஒவ்வொரு பகுதியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு படையினர், தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு […]