பேங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை மிருகங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. பேங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமையை சோதனையிட்ட போது அவரது பையில் அரியவகை மிருகங்கள் இருந்ததாகக்கூறி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 மர்மோசெட் குரங்குகள், 8 சுகர்கிளைடர்ஸ் மற்றும் 3 டெகு பல்லிஇனங்கள் ஆகியவற்றை பேங்காக்கிலிருந்து கடத்தி வந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் ஆரோக்யமான உடல்நிலையில் இருப்பதாக வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரமும் இதே போன்று […]
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது கரையை கடந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் காரணமாக பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதில், கொழும்பு, கடப்பா, தூத்துக்குடி, மும்பை ஆகிய ஊர்களுக்கு […]
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 2 விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழக்தை நெருங்கி வருவதன் காரணமாக நாளை வடதமிழகம் பகுதியில் கனமழை பெய்ய உள்ளது என்பதால், அதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, விமான சேவைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையத்திற்கு வரும் தூத்துக்குடி மற்றும் ஷீரடியில் இருந்து வரும் விமானங்கள் , சென்னையில் இருந்து […]
2400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை விமான நிலைய பணிகள் விரைவில் நிறைவடைந்து வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்து திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமானநிலையத்திற்கு அன்றாடம் பயணிகளின் வரத்தும், விமானங்களின் வரத்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சரிப்படுத்த, விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 2,400 கோடி செலவில் விமான நிலையத்தில் முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. […]
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். எத்தியோப்பியாவில் இருந்து இக்பால் பாஷா என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில், ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சூட்கேஸ் மற்றும் பைகளுக்கு நடுவில் வைத்து மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண்கள் இணைந்து செயல்பட கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அந்த குழுவை மேம்படுத்துவதற்கான நலத்திட்ட வசதிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதும் அவ்சார் எனும் திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக்குழுவினருக்கான விற்பனை மையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எழுதக்கூடிய கடிதத்தையே திட்டமிட்டு மறைத்து பேசுவதை திட்டமிட்ட எதேச்சதிகாரம் என்பதா? (அ) பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடுகளின் வெளிப்பாடு என்பதா? என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் செட்டியுள்ளார். மத்திய அரசு உடனடியாக, ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்தும் புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவில் […]