வடபழனியில் இன்று அதிகாலை சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று இருந்த போது அந்த வழியாக வந்த சென்னை மாநகர பேருந்தின் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி பணிமனையில் இருந்து 159ஏ என்ற சென்னை மாநகர் பேருந்து புறப்பட்டு சென்றது. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் யாரும் பேருந்தில் இல்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. வடபழனி அருகேயும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. […]