Michaung Cyclone : வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்தது. மழை பெய்து 6 நாட்கள் கடந்தும் இன்னும் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே மிகுந்த சிரமத்திற்குள்ள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மிக்ஜாம் புயல் – மழைநீர் பாதிப்பு குறித்து , மாநகராட்சி நிர்வாகம் தரவுகளை வெளியிட்டுள்ளது […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த அதீத கனமழையால் சென்னை புறநகர் பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முழுதாக திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நின்று 4 நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாத நிலை தொடர்கிறது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..! புயல் ஓய்ந்த பின்னரும் சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இன்றும் […]
மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியினர் மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. சென்னை மத்திய பகுதிகளில் நிலைமை பெருமளவு சீரடைந்தாலும், சென்னை புறநகர் பகுதியில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. ஒவ்வொரு பகுதியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு படையினர், தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு […]
மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், புயல் மீட்பு பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுக்களை சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, விஜயவாடாவில் வந்துள்ள […]
வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தை குறிப்பாக தலைநகர் சென்னையை மிரட்டி, ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முழுதாக நீங்கவில்லை. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிக்க தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைநீர் இன்னும் பல்வேறு பகுதிகளில் வடியாமல் இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு நபர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளவர்கள் பெரிய அளவில் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தத்தால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. புயல் சென்னை விட்டு விலகி சென்றதால் மழை சற்று குறைந்துள்ளது. மறுபக்கம் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று […]
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி சென்ற நிலையில், மழையின் தீவிரம் குறைந்து, தற்போது […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வால்டக்ஸ் சாலை, கொளத்தூர் நிவாரண முகாம்களிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், உணவுகளை வழங்கினார். இதன்பின், சென்னையில் வெள்ளம் சீரமைப்பு பணிக்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடவிய விடிய வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை ஒரு தீவு திடலாக காட்சியளிக்கிறது, பார்க்கும் இடம்மெல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது. இந்த சூழலில் சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து, மழை நின்றுள்ளது. மிக்ஜாம் புயலானது […]
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. புயலானது தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி சென்றுவிட்டது. இன்று முற்பகல் ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து உள்ளது. மிகஜாம் புயல் சென்னையை கடந்து சென்றும், புயலின் தாக்கம் தலைநகர் சென்னையை வெகுவாக பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளதாக தகவல்கள் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது […]
சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கடுமையாக தாக்கி வருகிறது. சென்னையில் இருந்து 90கிமீ தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜாம் புயலானது நிலைகொண்டுள்ளது. மணிக்கு 10கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அதி கனமழை அளவு கொட்டி தீர்த்து வருகிறது. இன்று இரவு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கனமழை […]
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கனமழை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மிதக்கிறது. அதே சமயம் மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை பெய்யும் என்பதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான இடஙக்ளில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது . அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயலாந்து நாளை முற்பகல் தான் கரையை கடக்கும் என்பதால் இன்னும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய […]
மிக்ஜாம் புயலாக (Michaung Cyclone) வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நேற்று முதல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் […]
வங்கக்கடலில் நிலைகொண்டு சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது மிக்ஜாம் புயல் (Michaung Cyclone). சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு முதல் பெய்ய தொடங்கிய அதீத கனமழையானது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை அகற்றும் […]
வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி! சென்னை […]
வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது. அதே போல நேற்று இரவு முதலே சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை […]
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து வருகிறது. அதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையினை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் […]