சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புயல் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்று இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பி உள்ளது. ஆறு, ஏரிகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் […]
இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறும். 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு 110கி.மீ தொலைவில் புயல்..! இன்று இரவு வரை […]
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 130 கிமீ தூரத்தில் உள்ள புயலாந்து 14கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதால் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையே நாளை காலை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நேற்றும் இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றிரவு […]
சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தேன். திமுக அரசு ஒரு சொட்டு நீர் கூட இல்லை என கூறி வருகிறார்கள். தவறான செய்தியை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். – எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசின் மீது பல்வேறு குற்றசாட்டுகக்ளை முன்வைத்தார். அவர் கூறுகையில், ‘வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே […]
அனைத்து துறை அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள். நகராட்சி துறை அமைச்சர், மின்சாரத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர். – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன். வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளது. இருந்தும், மழைநீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், […]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கமும், சுரங்கப்பாதை […]
சென்னையில் கனமழை காரணமாக, எழும்பூர் – கடற்கரை இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் […]