சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை போன்ற சூழலை, தான் கண்டதாக ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு அக்கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சரியாக 12.20 மணிக்கு மேல், ராமர் கோயிலுக்குள் சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு பால ராமர் சிலைக்கு உயிரூட்டப்பட்டது. […]