சூறாவளி காற்றுடன் ஈரோட்டில் பலத்த மழை பெய்து வருகிறது..!!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பவானி, கோபி, தாளவாடி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. […]