அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், தளபதி விஜய் ஏன் இன்னும் விஜயகாந்த் குறித்து நலம் விசாரிக்கவில்லை என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது. […]