டேராடூனில் காணப்படும் ஒரு அரிய வானவில் போன்ற சூரிய ஒளிவட்டம் ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டின் டேராடூனில் சூரியனைச் சுற்றி வானவில் போன்ற ஒளிவட்டம் காணப்பட்டது. இந்த அரிய நிகழ்வின் படங்களைப் இணையத்தில் மக்கள் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், “வளிமண்டலத்தில் இடைநிறுத்தப்பட்ட மில்லியன் கணக்கான அறுகோண பனி படிகங்களால் சூரிய ஒளியின் ஒளிவிலகல் காரணமாக சூரியனைச் சுற்றி ஒரு வானவில் போன்ற ஒளிவட்டம் தோன்றுகிறது”என்று கூறினார்.
பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் வெற்றிகரமாக சூரியனின் வளி மண்டலத்திற்குள் நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் முதன் முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை தயாரித்துள்ளனர். இந்த விண்கலம் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பார்க்கர் விண்கலனை மீண்டும் மீண்டும் சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி அதை கடந்து […]