கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? என மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014-15 இல் இருந்து […]
தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியாகியுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அண்ணா, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் […]
கல்வி அமைச்சக வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். இடஒதுக்கீட்டு காலி இடங்களை நிரப்ப அரசு சொன்ன ஓராண்டு கெடு முடிந்தது. ஆனால் ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனத்தில் 1400 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள் 20 % இடங்களை கூட நிரப்பவில்லை. காலக்கெடு என்பது கண்துடைப்பு தானா? உயர்கல்வி […]
இது ஆச்சாரத்தின் பால்நின்று வெளிப்படுத்தும் அடையாளம் என நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாடாளுமன்றத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமைப்படாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் என்றும், நான் ‘வெங்காயம்’ சாப்பிட மாட்டேன். ஆனால் வெங்காயம் சாப்பிடுபவர்களின் பிரச்சனைகளுக்காகவும் பேசுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சு.வெங்கடேசன் அவர்கள் […]
மதுரையில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா” அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கிறது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி […]
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது […]
ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு. அந்த கண்ணுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டிற்கு சுண்ணாம்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
தகைசால் தமிழர் விருது பெறவுள்ள நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர போராட்ட வீரரும் […]
இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளா என ஒரு நாளிதழில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் (61), இதிலும் கடைசி குஜராத்தான் (24). ஒரு மசோதா நிறைவேற குஜராத் எடுத்துக் கொள்ளும் […]
ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு, சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம். இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை […]
பள்ளியில் சிறுவன் வித்தியாசமான முறையில் உறங்குவதை கண்டு ரசித்த எம்.பி. சு வெங்கடேசன் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று ஒரு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு குழந்தைகளுடன் உரையாடியது மட்டுமல்லாமல், அங்கு தூங்கி கொண்டிருந்த சிறுவனையும் ரசித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்வின் பேரழகு அரிட்டாபட்டி ஆய்வுப் பணியின் போது. இடது பக்கம், மாநிலத்திலேயே வயது மூத்த ஊராட்சி தலைவி வீரம்மாள்(84) மறுபக்கம் அன்று தான் பள்ளியில் சேர்ந்து அயர்ந்து தூங்கும் அன்பு […]
அரசு வங்கி என்ற அந்தஸ்தே தற்காலிகம் எனச் சொல்வது குறித்து கவலைப்படாமல் அக்னிபத்திற்கு எப்படி நம்பிக்கை கொடுக்கிறார்கள்? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. அக்னிபத் பிரச்சாரத்தில் […]
பிரதமரின் 10 லட்சம் வேலை – 18 மாத காலக் கெடு அறிவிப்பு சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 […]
இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம் […]
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்து ட்வீட். மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து. சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாமதமெனினும் வரவேற்கிறோம் ! மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் […]
அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது. இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். […]
இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி இஸ்ரோ இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம், இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை […]
இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது என ஆளுநரின் தேநீர் விருந்து குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக […]
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என சு..வெங்கடேசன் எம்.பி ட்வீட். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த […]