Su Venkatesan : அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் என்பவரும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று மதுரை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் […]
Election2024 : மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களையும் கட்சிகள் அவ்வப்போது அறிவித்து வருகிறது. Read More – மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.! அந்த வகையில், மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு. வெங்கடேசன் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் […]
Su Venkatesan : இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆனந்த் அம்பானி – ராதிகாவின் ப்ரீ வெட்டிங் விழா கோலாகலமாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த […]
மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை, எம்பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மதுரை, வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள விழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குள மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு , தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் […]
மதுரை துணை மேயராகவும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்து வரும் நாகராஜனின் வீடு மற்றும் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இவரது வீட்டிற்கு நேற்று வந்த 2 மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களோடு நாகராஜனை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட நாகராஜன் தனது மனைவி, குழந்தைகளை சட்டென்று அழைத்து கொண்டு வீட்டினுள் சென்றார். இதனால் கோபமுற்ற அந்த மர்ம நபர்கள் […]
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பாறை, குன்றுகள் இயற்கை சங்கிலிகள் இன்னும் அரிட்டாபட்டியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதன் மாண்பு குறையாமல் பாதுகாக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கடந்த 2020 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. தற்போது அது குறித்து, திட்டமிடலுக்காக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரிட்டாபட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக […]
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலை கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்று கற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறித்து, இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 130 கோடி மக்களும் தமிழை காப்பாற்ற வேண்டியது கடமை என […]
SSC தேர்வுகளுக்கு இந்தியில் கேள்வித்தாள் இருக்கிறது. ஆனால், அதற்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை. இது தமிழக இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி. என எம்.பி சு.வெங்கடேசன் டிவீட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அண்மையில், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL எனும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று […]
ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் செய்தியை பகிர்ந்ததை விமர்சனம் செய்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சுவெங்கடேசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இது ஹிந்தியவா? இந்தியாவா? ஹிந்தி திணிப்பை கைவிடுங்கள் என பதிவிட்டுள்ளார். அதாவது, இந்திய ரயில்வே துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ரயில்வே ஆட்சேர்பு தொடர்பாக யாரிடமும் ஏமாற வேண்டாம். அது உங்களை தகுதியற்றவர்களாக மாற்றிவிடும்’ என பொதுவான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மையான நிலவரம் என்னவென்றால், ‘வெச்ச செங்கலை கூட காணவில்லை’ என்கின்ற நிலைமையில் தான் உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, 95 சதவீத பணிகள் […]
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி […]
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. மணிமாறன் அவர்களின் தந்தையுமான திரு. சேடபட்டி இரா. முத்தையா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் […]
காலை உணவு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1.45 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்! காலை உணவுடன் கல்வி புகட்டும் கனவுத்திட்டம் அறிவிப்பு. பசி நீக்கி கல்வி தருதல் இடைநிற்றலைத் தடுக்க இனிய வழி. […]
சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூரியாவிற்கு வாழ்த்துகள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதினை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் […]
வாழவே விட மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு என மின்கட்டண உயர்வு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1… 2… 28 முறை அரசு மின் […]
குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்…, தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா என எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து மக்களவையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் துவாரகா மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் தூதரக […]
வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏன் மறுக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். குடம் குடமாக கொட்டும் இந்த கண்ணீரில் சிறு துளியேனும் அனிதாவுக்காகவோ, தனுசுக்காகவோ, கனிமொழிக்காகலோ கசிந்திருந்தால், சற்றேனும் […]
இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்? இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதவிருந்த தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வடுவே இன்னும் மறையாத நிலையில், இன்று காலை நீட் தேர்வு […]
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதா மூலம் விரைவில் நீட் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் […]